தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. அதேபோன்று தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் சிம்பு. இவர்கள் இருவரும் வல்லவன் என்ற படத்தில் நடித்த போது, தீவிரமாக காதலித்து வந்தனர். சினிமா பிரபலங்களில் மிகவும் ஹிட்டான ஜோடியாக இவர்கள் வளம் வந்தனர். இருப்பினும் சில காரணங்களால் அவர்கள் இருவரும் பிரிந்தார்கள். அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்கள். தற்போது இவர்கள் இருவரும் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கயாடு லோகர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிறார் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் நாளை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிம்பு மற்றும் நயன்தாரா கலந்து கொள்ள இருக்கின்றனர். அதாவது 9 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் ஒரே பிரேமில் வரப்போகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.