
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பீஹார்ல ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியுது, தமிழ்நாட்டில் எடுக்க முடியாதா ? கர்நாடகாவில் எடுக்க முடியுது, தமிழ்நாட்டில் எடுக்க முடியாதா ? தெலுங்கானாவில் வச்சிருக்காங்க… ஆந்திராவில் அறிவிச்சிருக்காங்க… ஒடிசாவில் அறிவிச்சிருக்காங்க… ராஜஸ்தான்ல அறிவிச்சிருக்காங்க…..
ஆனால் நீங்க பெரியார் வழியில் வந்தவர்கள் நாங்கள். என்று சமூக நீதிக்கு நாங்கள் தான் சொந்தக்காரர்கள் என்று சொல்லுகின்ற திமுக அரசு, அறிவிப்பதற்கு என்ன உங்களுக்கு தயக்கம் ? ஏன் என்ன காரணம் ? பல கூட்டத்தில் நான் சொல்லிட்டு இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 76 வருஷமா ஆயிடுச்சு.
இப்ப இரண்டு கட்சி மாற்றி ஆட்சி செய்து 55 ஆண்டுகள். 55 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நாம் கெஞ்சுகின்ற நிலையில் தான் இருக்கின்றோம். ஐயா ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்க. ஐயா வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு கொடுங்க. ஐயா தென்மாவட்டத்தை கொஞ்சம் வளர்ச்சி அடைய வையுங்க, வேலை வாய்ப்பு கொடுங்க, இப்படி ஒவ்வொன்றாக நாம் இன்னும் கெஞ்சுகின்ற நிலையில் இருக்கின்றோம்.
நம்முடைய பலம்… நம்முடைய மக்கள் தொகை எல்லாம் பார்த்தீங்கன்னா….. நாம் எல்லோரும் ஒன்று இணைந்து, பாட்டாளிகள் – உழைப்பாளிகள் – விவசாயிகள் எல்லாம் ஒன்று இணைந்தால் போதும். வேற யாரும் தேவையில்லை. நம்முடைய இலக்கை நாம் அடையலாம். அந்த அதிகாரம் அரசியல் அதிகாரம் தான் வேண்டும். அதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.