செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  இன்றைக்கு இருக்கிற முதலமைச்சருக்கு தில்லு திராணி வேணும். அது அவர்கிட்ட இல்ல. இதே நீங்க சொன்னீங்களே  7.5% உள்ள இட ஒதுக்கீடை கொண்டு வருகின்ற போது மேதகு ஆளுநர் அவர்கள் இசைவுதர காலம் தாழ்த்தினார்கள். ஆனால் அப்போது  நீட் தேர்வு எக்ஸாம் வர சூழ்நிலை…

உடனே நாங்கள் அண்ணா திமுகவின் உடைய அம்மா, அரசு இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 121இன் படி மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு,  எக்ஸிக்யூட்டிவ் பவர் ஆஃப் தி ஸ்டேட்… ஆளுநரின ஒப்புதலுக்கு காத்திராமல் அரசாணை  வெளியிடப்பட்டது. அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் நுழைவுத் தேர்வினால் மருத்துவக் கல்லூரியில்  போதிய அளவு தேர்வாகாத  காரணத்தினால் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடை வழங்கும் மசோதா சட்டப்பேரவை சட்டபேரவையில் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டும்,

ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது காலதாமதம் ஏற்பட்டதால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 162 மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திராமல் அரசாணை வெளியிட்ட அரசாங்க அண்ணா திமுக அரசாங்கம். நாங்கள் யாருக்கும் அஞ்சுவதில்லை. நாங்க வெளிநடப்பு செய்து வந்த பிறகு நம்முடைய சட்டப்பேரவை முன்னவர் அவர்கள் சொல்கிறார்…  பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்கிறார்.