
திரைத்துறையில் கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் புகழும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. இதைப் போன்று வில்லனாக நடிக்கும் நடிகர்களுக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைத்து வருகிறது .இந்நிலையில் வில்லன் நடிகர்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளி வந்துள்ளது.அது பற்றி தற்போது பார்ப்போம். அதில் ஆஷிஷ் வித்யார் த்தி என்பவர் தில் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். இவர் ஒரு படத்திற்கு பல லட்சத்திற்கு மேலாக சம்பளம் வாங்குவார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 90 கோடி என கூறப்படுகிறது.
அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் நடிகராக வலம் வருபவர் ராணா டகுபதி. இவர் பாகுபலி போன்ற திரைப்படங்களின் வில்லனாக நடித்து தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர் ஒரு படத்தில் நடிக்க 3 முதல் 6 கோடி வரை சம்பளமாக வாங்குவார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 45 கோடி என சொல்லப்படுகிறது . இதை தொடர்ந்து நடிகர் டேனியல் பாலாஜி இவர் கௌதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக அறிமுகமானார். இவர் சமீபத்தில் மாரடைப்பால் மறைந்தார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான முரளியின் தம்பி. இவரின் சொத்து மதிப்பு 12 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் முன்னணி நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜ். இவர் ஒரு படத்திற்கு சராசரியாக 2.5 கோடி வரை சம்பளம் வாங்குவார். இவரின் சொத்து மதிப்பு 40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.