
தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் அனில் ரவிபுடி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த “சங்கராந்தி வஸ்துன்னம்” திரைப்படம் ரூ. 300 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அவர் நடிகர் சிரஞ்சீவியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இது நடிகர் சிரஞ்சீவியின் 157 ஆவது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தினை சாஹு கரபதி தயாரிக்கிறார்.
இந்நிலையில் சிரஞ்சீவியின் ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது இந்த படத்தில் நடிக்க 18 கோடி ரூபாய் நயன்தாரா சம்பளம் கேட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் தற்போது நயன்தாராவிடம் சம்பளத்தை குறைக்குமாறு படக்குழுவினர் கேட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.