
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் ரேஸிங் போட்டியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அஜித் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘AK 64’ படத்தின் படப்பிடிப்பு 2025 அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. “Good Bad Ugly” படத்தில் பணியாற்றியவர்கள் இப்படத்திலும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
அதோடு இப்படத்தை சுப்ரீம் சுந்தர் சண்டை இயக்குனராக பணிபுரிய உள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.