
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்த போது ஏற்பட்ட விபத்தில் டிடிஎஃப் வாசன் காயம் அடைந்துள்ள.
இருசக்கர வாகன பயணங்களில் ஈடுபட்டு யூடியூப் மூலம் பிரபலமான கோவையை சேர்ந்தவர் டி.டி.எஃப் வாசன். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் பகுதியில் வீலிங் செய்த போது நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானார். அப்போது விபத்தில் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டிடிஎப் வாசனை மீட்டு காஞ்சிபுரம் அடுத்த மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது வாகனத்த்தை அடையாளம் வைத்துதான் அவர் டிடிஎஃப் வாசன் என்றும் உறுதி செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#TTFVasan Accident ?????
— Karthik Ravivarma (@Karthikravivarm) September 17, 2023
TTF Vasan Friend Ajees about Vasan Bike accident.#TTFvasan #TTF pic.twitter.com/P1styhpH7G
— Think Cinema (@ThinkCinemaOffl) September 17, 2023