
பீகாரில் ஆதார் அட்டை வைத்திருக்கும் நாய்க்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள அலுவலகத்திற்கு ஜாதி சான்றிதழ் கோரி ஒரு விண்ணப்பம் வந்தது. ஆனால் அந்த விண்ணப்பத்தை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அந்த சான்றிதழ் விண்ணப்பம் நாய் ஒன்றின் பெயரில் கேட்கப்பட்டிருந்தது.
மேலும் நாய்க்கு அடையாள சான்றாக ஆதார் அட்டையும் சேர்த்து அனுப்பி இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆதார் அட்டையில் சம்பந்தப்பட்ட நாயின் பெயர் டானி என்றும் பிறந்த தேதி 2022 ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நாய்க்கு ஆதார் கார்டு வாங்கிய நிலையில் தற்போது அதற்கு ஜாதி சான்றிதழ் விண்ணப்பித்துள்ள நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.