செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், காங்கிரஸ் ஆட்சியில் 2G  இரண்டே கால் லட்சம் கோடி ஆஹா.. ஓஹோ… என சொன்னீங்க. திமுக – காங்கிரஸ் தோக்க அதான் காரணம். இப்போ அதானிக்கு 25 லட்சம் கோடி டேக்ஸ் தள்ளுபடி பண்ணுறீங்களே … அதானி யாரு ? ஒட்டுமொத்த கார்ப்ரேட்  காலில் கொண்டு போய் கொட்டுறீங்க… ஒரு துறையும் இல்லையே…

பலத்த சந்தேகம் வருது… நீங்க யாருமே கேட்கல… பத்திரிகை சார்பாக நான் கேட்கிறேன்… ஏர்போர்ட் அதானி…  கப்பல் அதானி… இப்ப யாராவது கூலி வேலை  கஷ்டப்பட்டு,  ஆறு வருஷம் வேலை செஞ்சு…  கொஞ்சம் பணத்தை அதிகமாக்குறதுக்கா தங்கம் கிங்கம்,  ”தப்பு தான்” கடத்திட்டு வந்து தெரியாம ஜட்டிக்குள்ளேயே… நகையாகவோ,  போட்டுட்டு வந்தா கப்புனு அமுக்கி கேவலப்படுத்துறீங்க..  இதே அதானி வெளிநாட்டுகளில் எத்தனை தங்கம் வருது ? எத்தனை போதை பொருள் வருது…. எத்தனை  டன் டன்ன்னாக கடத்திட்டு வாறாங்க.

உதாரணத்துக்கு குஜராத் ஷிப். கொண்டு வந்தனா ? உங்களுக்கு என்ன தெரியும்.. ஏர்போர்ட் அவங்ககிட்ட இருக்கு…. கொண்டு வரலாம் இல்லையா?  டன் டன்னாக கொண்டு வரலாம் இல்லையா ? யாரோட பணம் போகுது….  இல்லீகளா கொண்டுவந்து மார்வாடிக்கு குடுத்துகிட்டு இருக்காங்க, இப்ப…  நான் குற்றம் சுமத்துறேன்…

எப்படி தனியார் கிட்ட இப்படி தூக்கி தூக்கி கொடுத்துட்டு.. இருக்கிற வேலையெல்லாம் போயிருச்சு…. நக்கிகிட்டு  தான் இருக்காங்க.  இதுக்கு என்ன பதில் சொல்றீங்க ?  ஒன்னா ? இரண்டா ? நான் ஒண்ணுமே சொல்லல….  நார்த் இந்தியா ஃபுல்லா நாறுது…  இப்போ நடக்குற தேர்தல்  சட்டிஸ்கர், மத்திய பிரதேசம் காங்கிரஸ் தான் ஜெயிக்கும். நான் அடிச்சு சொல்லுறேன். எனக்கு காங்கிரஸ் பிடிக்காது,  பிடிக்கவில்லை என்று வேற விஷயம் என தெரிவித்தார்.