
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் A1 மற்றும் A2 என்று வகைப்படுத்தி பால், தயிர், நெய் போன்ற பொருட்களை விற்கின்றனர். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிப்படி, இதுபோன்று பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை வகைப்படுத்தல் கூடாது. இது விதிமீறல் ஆகும். இந்த விதிமீறல் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய எண் அல்லது பதிவு செய்யப்பட்ட தொடர்பு எண்ணில் தெரிந்தது.
இதைத்தொடர்ந்து பால் பொருட்களில் இருக்கும் லேபிள்களை அந்தந்த நிறுவனங்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. குறிப்பாக ஆன்லைனில் விற்கப்படும் பால் பொருட்களை A1 மற்றும் A2 என்று வகைப்படுத்தும் லேபிள்களை அகற்ற வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். மேலும் எந்த ஒரு நிறுவனங்களுக்கும் கால அவகாசம் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது.