
பீகார் மாநிலத்தில் வசிக்கும் ஒரு இளம் பெண். இவர் கோண்டியா-பராவுனி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து கொண்டிருந்தார். இந்த ரயில் உத்திரபிரதேச மாநிலத்தின் பால்லியா ரயில் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கொண்டிருக்கும்போது அந்த இளம் பெண்ணின் பெட்டிக்கு டிக்கெட் பரிசோதராக வந்த ராகேஷ் குமார் படுத்து உறங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் தகாதவாறு நடந்து கொண்டுள்ளார்.
இதனால் அச்சத்தில் அந்தப் பெண் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராகேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஓடும் ரயிலில் பரிசோதகரே, இளம் பெண்ணிடம் தவறாக நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.