
திரிபுராவில் உள்ள உனகொட் மாவட்டத்தில் 6 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு உறவினர் வீட்டில் நடந்த மத நிகழ்ச்சியில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு உள்ளார். அந்த நிகழ்ச்சியில் இசை குழுவினர்களும் பங்கேற்று உள்ளனர். அந்த இசை குழுவில் இருந்த சமீர் சப்நகர்(26) என்பவர் சிறுமியை வீட்டில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அலறி உள்ளார். இந்த சத்தத்தை கேட்ட உறவினர்கள் அறையை திறந்து பார்த்தபோது, இளைஞர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இந்நிலையில் அவரை சரமாரியாக தாக்கி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இளைஞர் சமீர் சப்நகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இளைஞர் மீதான குற்றச்சாட்டு உறுதியான நிலையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.