வெயிட் லிப்டிங் செய்யும் நபர் ஒருவர் ஜிம்மில் சுமார் 165 கிலோ எடையை தூக்க முயற்சி செய்கிறார். முதலில் அவர் வெயிட் லிஃப்டின் செய்யும் எந்திரத்தின் மேல் படுத்தார். அதன் பின் அவரது மனைவி அங்கு வந்து, 160 கிலோ எடையை தூக்கி தனது கணவனின் கையில் கொடுக்கிறார். இதையடுத்து அவரது கணவர் அந்த எடையை தூக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை.

இதனால் அவரது மனைவி, அவருக்கு உதவி செய்ய முன் வருகிறார். ஆனால் அந்த 165கி எடை அவரது கழுத்தில் விழுந்தது. இதைப்பார்த்த அவரது மனைவி எடையை தூக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. இதையடுத்து அவர் படுத்திருந்த எந்திரத்தில் இருந்து கீழே விழுந்தார். அதன் பின், அவர் அதிலிருந்து தப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.