தெலுங்கானா மாநிலத்தில் கம்மம் என்ற மாவட்டத்தில் முசம்மில் கான் என்பவர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிகிறார். இவர் அந்த மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் மேற்கொண்டு சிறப்பாக நடத்தி வருகிறார். இந்நிலையில் பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்பதை கருத்தில் கொண்டு பெண் பிறப்பு சதவிகிதத்தை அதிகரிக்கும் வகையில் ஒரு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

அதாவது “பெண் பெருமை” என்ற தலைப்பில் அந்தத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்த நிலையில், ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் அவர்களுடைய வீட்டிற்கே சென்று ஸ்வீட் பாக்ஸ் வழங்க வேண்டும். இது தொடர்பாக அவர் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி பெண் குழந்தை பிறக்கும் வீட்டிற்கு அதிகாரிகள் நேரில் சென்று ஸ்வீட் பாக்ஸ் வழங்குவார்கள். இதேபோன்று மாவட்டத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் சுய உதவி குழுக்களை ஆரம்பித்து கடன் உதவிகளை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதோடு 19 டீக்கடை மற்றும் உணவுகளை பெண்களின் மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். மேலும் அரசு ஊழியர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக மாவட்ட அலுவலக வளாகத்தில் பராமரிப்பு மையத்தை உருவாக்கி குழந்தைகளை பாதுகாக்க ஊழியர்களை நியமித்துள்ளார்.