
நெல்லை மாநகரில், கல்லூரி மாணவியை சாலையில் சுற்றி திரிந்த மாடு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவாதிகா என்ற மாணவி ஸ்கூட்டியில் கல்லூரிக்கு செல்லும் போது, தியாகராஜ நகர் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. சாலையில் நடமாடிய மாடு, எதிர்பாராத விதமாக சுவாதிகாவின் ஸ்கூட்டியை மோதியது, இதனால் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். விபத்தில் காயமடைந்த சுவாதிகா அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகரில் மாடுகளால் அடிக்கடி இவ்வகை விபத்துகள் நடைபெறுவதால், மக்கள் மாடுகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். நெல்லை மாநகரில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ள நிலையில், மாடு தாக்கி காயமடைந்த மாணவியின் காட்சி அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.