பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தக் காரில் 7 பள்ளி குழந்தைகள் பயணித்தனர். அப்போது சாலையின் எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் காரின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் 6 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒரு குழந்தை மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பியது.

இந்நிலையில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். விபத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் உயிரிழந்த ஓட்டுனர் மற்றும் குழந்தைகளின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.