ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்ணவரப் பகுதியில் வசித்து வருபவர் வம்சி நாத் ரெட்டி. இவர் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி மற்றும் தொழிலதிபராவார். இவர் தனது பிறந்த நாளன்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடிந்து கோயில் வெளியே உள்ள பிரகாரத்தில் வம்சி நாத் 4 போட்டோகிராபர்கள் வைத்து போட்டோ சூட் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இது தரிசனத்திற்கு வந்த பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது.

இந்த போட்டோ ஷூட் குறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் பக்தர்களில் சிலர் புகார் தெரிவித்தனர். ஆனால் தேவஸ்தான அதிகாரிகள் இது குறித்து எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த பக்தர்கள் போட்டோ சூட்டை முழுவதுமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.