மேற்கு வங்காள மாநிலம் பங்கூரா மாவட்டத்தில் வசித்து வரும் ஸ்ரீகாந்த் குமார் தத்தா என்ற நபர் தன்னுடைய கோபத்தையும் விரத்தியையும் வித்தியாசமான முறையில் அரசு அதிகாரியிடம் வெளிப்படுத்திய சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஸ்ரீகாந்த் குமார் தத்தா என்ற நபருடைய ரேஷன் கார்டில் ஸ்ரீகுமார் குத்தா என்று அச்சிடப்பட்டிருந்தது.

தத்தா என்னும் பெயருக்கு பதிலாக குத்தா என அச்சிடப்பட்டிருந்ததால் அந்த பிழையை திருத்துவதற்காக அதிகாரிகளிடம் பலமுறை விண்ணப்பித்தும் எந்த தேர்வும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அரசு அதிகாரி சென்ற வாகனத்தை நோக்கி அந்த நபர் தனது ரேஷன் கார்டை கையில் வைத்துக் கொண்டு நாய் போல குரைத்து தன்னுடைய கோபத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்த சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருவதால் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் அரசு அதிகாரியை நோக்கி நாய் போல அந்த நபர் குறைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து அந்த அரசு அதிகாரி அந்த நபரின் குறையை கேட்டு உரிய திருத்ததிற்கான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவால் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கான அரசு சேவைகள் சரியாக செயல்பட வேண்டும் என்பதற்கான முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.