ஓஹையோ மாநிலத்தைச் சேர்ந்த 36 வயதான ரையன் கிரூவெல் கடந்த ஆண்டு தனது வாழ்க்கையை முழுமையாக மாற்றியுள்ளார். 2023 ஜனவரியில் 487 பவுண்ட் (222 கிலோ) எடையுடன் இருந்த ரையன், அதிக எடையால் முழங்கால்களில் ஏற்பட்ட வலியால் நடைப்பயிற்சி தொடர முடியாமல் தவித்தார். இதனையடுத்து, குறைந்த அழுத்தத்துடன் உடற்பயிற்சி செய்யலாம் என சைக்கிளை ஓட்ட ஆரம்பித்தார். 2023 மே 6ஆம் தேதி முதல் சைக்கிளை ஓட்ட தொடங்கிய இவர், சுலபமாக 70 பவுண்ட் எடையை குறைத்ததாக தெரிவித்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Ryan Grewell (@ryan_grewell)

அதன்பின்னர், உணவுப்பழக்கங்களில் மாற்றம் கொண்டு, எண்ணிக்கை கணக்கிட்டு உணவுகளை எடுத்துக்கொண்டு, புரதச்சத்து அதிகமாக கொண்ட உணவுகளை முன்னிறுத்தினார். பொரித்த உணவுகள், இனிப்புகள், மதுபானங்கள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்தார். இந்த மாற்றம் அவருக்கு சாதாரணமாக இல்லாமல் இருந்தது. “நான் எவ்வளவு காலோரிகள் எடுத்துக்கொண்டேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் அந்த எடையை தாங்க அது மிக அதிகமாக இருந்திருக்கும்,” என்று அவர் ரெடிட்-இல் பகிர்ந்தார்.

தற்போது, ரையன் கிரூவெல் 212 பவுண்ட் (96 கிலோ) எடையுடன் உள்ளார். இதுவரை அவர் 275 பவுண்ட் (125 கிலோ) எடையை குறைத்துள்ளார். “இன்னும் நான் 100% என் இலக்கை எட்டவில்லை. ஆனால் இது நான் எதிர்பார்த்ததைவிட வேகமாக நடந்துவிட்டது. சைக்கிள் தான் இம்மாற்றத்தின் காரணியாக இருந்தது. என் வயிற்றிலும் தொடைகளிலும் கூடுதல் தோல் உள்ளது. அதை அகற்றும் அறுவை சிகிச்சையை 2024 நவம்பரில் மேற்கொள்வேன். இது watts per kilogram-ஐ அதிகரிக்கும்!” என நகைச்சுவையாக அவர் தெரிவித்துள்ளார்.