தர்மபுரியில் முகமது சுகில் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் மத்திய சிறையில் இருக்கும் கைதி ஒருவரை பார்ப்பதற்காக சென்று இருந்த நிலையில் தான் கொண்டு வந்த பிஸ்கட்டை அவரிடம் கொடுக்குமாறு காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அப்போது காவல்துறையினர் சந்தேகம் அடைந்ததால் பிஸ்கட்டை வாங்கி சோதனை செய்தனர்.

அதில் 80 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்த நிலையில், முகமது சுகிலை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.