
ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்கு கியூவில் பல மணி நேரம் காத்துக்கிடக்க வேண்டியதாக உள்ளது. அதுவும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் டிக்கெட்டை பெற தாமதமாகிறது. இதனால் தற்போது QR கோடு மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதி பல ரயில் நிலையங்களில் அறிமுகமாகியுள்ளது. முதல் கட்டமாக இந்த வசதி வடகிழக்கு எல்லை ரயில்வே சுற்றியுள்ள 5 பிரிவுகளில் 588 QR கோடு முன்பதிவு கவுண்டர்களை பொருத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தில் உள்ள மாவட்டங்கள் மற்றும் வடக்கு பீகாரில் உள்ள மாவட்டங்களில் இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளன. இதுகுறித்து வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தலைமை அதிகாரி கபிஞ்சல் கிஷோர் சர்மா கூறியதாவது, இந்த டிஜிட்டல் பேமென்ட் முறை பயன்படுத்தி எந்தவித இடையூறும் இல்லாமல் சுலபமாக டிக்கெட்டை பெறுவதற்கு பயன்படுகிறது என்று அவர் கூறினார். இதனால் பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்களையும் தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.