ஹரியானாவில் அமைதியான குடியிருப்பு பகுதியில் நபர் ஒருவர் பிச்சை கேட்க வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தபோது, அருகில் ஒரு பூனை அமைதியாக நடந்து சென்றது. எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல், அவர் கையில் வைத்திருந்த உலோக பாத்திரத்தில் அந்த பூனை மீது அடித்தார். ஒரே அடியில் பூனை உயிரிழந்தது. அதன் பிறகு, அவர் அந்த உயிரற்ற பூனையை தூக்கி அருகிலுள்ள வடிகாலில் வீசிய காட்சியும் பதிவாகியுள்ளது.

 

இந்த கொடூர சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியவுடன், பலரும் அதிர்ச்சியும் கோபமும் தெரிவித்து வருகின்றனர். ஒரு விலங்கின் மீது இத்தனை கடுமையான தாக்குதல் நடத்தப்படுவது மனித நேயத்திற்கே எதிரானது என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையிடம் புகார்கள் தரப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய செயல்கள் சட்டப்படி கடுமையான குற்றமாகக் கருதப்படுவதால், விலங்குகள் மீது பீதி மற்றும் வன்முறையை தூண்டும் நபர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றே பலர் வலியுறுத்தி வருகின்றனர்.