இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவரை பெரிய சிங்கம் ஒன்று துரத்துகிறது. அங்கு 4 வாலிபர்கள் இருக்கிறார்கள். ஒருவர் சுவற்றின் பின்னே மறைந்திருக்கிறார். மற்றொருவர் தனது கையில் உள்ள செல்போனில் வீடியோவாக பதிவு செய்கிறார். இன்னும் ஒருவர் அந்த இடத்திற்கு சிறிது வெளியே நிற்கிறார்.

 

இதில் ஒரு வாலிபரை மட்டும் அந்த சிங்கம் துரத்தி துரத்தி அவரை பிடித்து கட்டியணைத்து கொள்கிறது. இதில் அவர் பயந்து நடுங்குகிறார். அவர் அந்த சிங்கத்தை தனது கைகளால் தடுத்து நிறுத்துகிறார். இருப்பினும் அது அவரை விட்டு விலக வில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.