கரூர் மாவட்டம் சுங்ககேட் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். கடந்த 25ஆம் தேதி இரவு நேரத்தில் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் முகமுடி அணிந்து கொண்டு 3 மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் வருவதை அறிந்து சத்தமிட்ட ஆறுமுகத்தை மர்மநபர்கள் கத்தியால் குத்தினர்.

பின்னர் வீட்டிலிருந்த பீரோவில் இருந்து ரூ.6 லட்சம் ரொக்கம் மற்றும் 5 சவரன் நகைகளை திருடி சென்றனர். இதைத்தொடர்ந்து இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் தற்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 மர்மநபர்கள் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்.

அதில் கரூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் ராஜீவ் காந்தி மற்றும் அவரது 2 நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரிய வந்தது. பின்னர் அவர்களிடமிருந்து கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.