ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ரூ.43 லட்சம் அரசு நிதிகளை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒடிசாவில் ராதாதீபூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஞ்சாயத்தில் நிர்வாக அதிகாரியாக கேந்திர மோகன் நாயக் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மத்திய நிதிக்குழு, மாநில நிதிக்குழு, பொது விநியோகத் திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்டங்களுக்கான நிதிகளை தவறாக பயன்படுத்தி பண மோசடி செய்துள்ளார்.

இதனால் அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பஞ்சாயத்தின் ஆக்சிஸ் மற்றும் கனரா வங்கிகளில் உள்ள கணக்குகளில் இருந்து சர்பெஞ்சின் கையொப்பங்களை போலியாக உருவாக்கி செக்குகள் மூலம் பணம் திருடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு மோசடி செய்த பணத்தை கிரிக்கெட் மற்றும் ஆன்லைன் சூதாட்ட செயலில் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. மேலும் கடந்த ஜூலை 2024 பணியில் சேர்ந்த இவர் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.