
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ADMK பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதால் திமுக பெரிய அளவுக்கு அச்சம் ஆகிப்போச்சு. சர்வாதிகாரியாக மாறி கூட்டணி கட்சிகள் அப்படியே நான் சொல்லுறத தான் கேட்கணும், அடிமை என்கிற மாதிரி வச்சிருந்தாரு. இப்போ எல்லாரும் தலை நிமிர ஆரம்பிச்சிட்டாங்க.
கேக்குற சீட் கொடுக்குறியா ? இல்லையா ? கேக்குற இடம் கொடுக்குறியா ? இல்லையா? இல்லனா ஆள விடு நான் போறேன். அப்போ ஆப்சன், என்கிட்டத்தான் வரணும். கூட்டணி குறித்து எல்லாம் கட்சி முடிவு செய்யும். ரைட் டைம்ல யாராரை செக்கிறது ? எப்படி வியூகங்கள் ? என்பதை கட்சி முடிவு செய்யும்.
எதிர்க்கட்சி கேட்குற கேள்விக்கு பேரவை தலைவரே பதில் சொல்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது. டிபேட்ல கலந்து கிட்டவரு. அவர போயி சபாநாயகரா வச்சா? அவர் வாயி சும்மா இருக்குமா? அவரே தான் பேசிட்டு இருப்பாரு. அவரை அமைச்சரா ஆக்கிருந்தா ? பிரச்சனை இல்ல.
அதனால அவருக்கு முடியல. டிபேட்ல எப்படி பேசுனாரு? ஒரு சபாநாயகருக்குன்னு மரபை இருக்குது. அந்த மரபை காப்பாத்தணும். அப்படிதான் எங்க ஆட்சி காலத்துல பின்பற்றுனோம். உதாரணத்துக்கு அம்மா காலத்துல நான் சபாநாயகரா இருந்தேன். அந்த மரபு எல்லாம் பின்பற்றப்பட்டது என தெரிவித்தார்.