ஒடிசாவில் பாரதிப் நகர் என்னும் பகுதியில் நேரு பங்லா மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எறிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 12 பெரிய படகுகள் மற்றும் 5 இயந்திரபடகுகள் உட்பட மொத்தம் 17 படகுகள் எரிந்து சேதமானது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்கையில் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் டீசல் டேங்குகள் வெடித்ததால் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு படகிலும் 3000 லிட்டர் டீசல் இருந்துள்ளது. இதன் காரணமாக தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.