கூகுள் பயனர்களின் தகவல்களை கசிய விட்டதற்காக அந்நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டாலர்களை அபராதமாக (ரூ. 11740 கோடி) செலுத்த வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த சில வாரமாக இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த விவாகரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கூகுள் தனது தயாரிப்புகள் மூலம் பயனர்களின் நடமாட்டம், ஆன்லைன் தேடல்கள் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை பல ஆண்டுகளாக கசிய விட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வெற்றி பெற்றதாக டெக்சாஸ் மாகாண அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் தெரிவித்தார்.

பழைய தயாரிப்புகள் தொடர்பான சில புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஜோஸ் காஸ்டனெடா தெரிவித்தார். மேலும் வருங்காலங்களில் தனி உரிமை பாதுகாக்கும் அமைப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக பயோமெட்ரிக் தரவு கசிவை தொடர்ந்து பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனமும் 1.4 பில்லியன் டாலர் அப்ராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.