
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சித்திக் மீது துணை நடிகையான ரேவதி சம்பத் என்பவர் பாலியல் புகார் கொடுத்தார். இவர் மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த நிலையில் பாலியல் புகார் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதால் தன் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அந்த விழாவின்போது நடிகை பீனா கலந்து கொண்டதாகவும் சித்திக்கை அவர் கட்டிப்பிடித்த ஆறுதல் சொன்னதாகவும் ஒரு வீடியோ பரவியது. இந்த வீடியோ வைரலான நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய ஒருவரை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்வதா என பீனாவுக்கு கண்டனங்கள் குவிந்தது.
இந்நிலையில் நடிகை பீனா தற்போது இந்த வீடியோ குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் நடிகர் சித்திக்கின் மகனை எனக்கு சிறுவயதிலிருந்து தெரியும். அவர் திடீரென இறந்து போனதால் அந்த சமயத்தில் என்னால் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க முடியவில்லை. அந்த சமயத்தில் எனக்கு உடல்நலம் சரியில்லாததால் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை.
பின்னர் அவரை நான் அம்மா பொதுக்குழு கூட்டத்தின் போது சந்தித்தேன். அப்போது தான் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினேன். அப்போது அவருக்கு பலரும் ஆறுதல் கூறினார்கள். எனவே இதுபோன்று தவறான வீடியோவை பரப்பாதீர்கள். மேலும் சித்திக் எப்போதும் என்னை ஒரு சகோதரி போன்று தான் நடத்தினார் என்று கூறியுள்ளார். அதோடு எந்த ஒரு விஷயத்தையும் தீர விசாரித்த பிறகு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
View this post on Instagram