
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தில் செல்லையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருந்த நிலையில், அவரது 3-வது மகன் கணேசன் அடிக்கடி மது போதையில் ரகலையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே சொத்து பிரச்சனையை காரணமாக தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கணேசன் வழக்கம் போல் போதையில் வந்து தகராறியில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய தந்தையிடம், கணேசன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த கணேசன் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.