சமூக வலைதளங்களில் நம்பமுடியாத வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் பரவி வருகின்றன. தற்போது, ஒரு நாயின் வீடியோ 2.78 கோடியே பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பெண் தனது செல்ல நாய்க்கு அது விரும்பும் உணவுகளை பாட்டிலில் வைத்து அன்புடன் பரிமாறுகிறார். ஆனால் அதே சமயம், கருப்பு உடை அணிந்து முகத்தை மறைத்த இருவர் வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சி செய்கிறார்கள்.

 

ஆனால் அந்த நாய், திருடர்கள் வந்ததை பார்த்தும், எதுவும் நடக்காதது போல, தனக்கு முன் இருந்த உணவை சாப்பிட்டு மகிழ்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அது எந்த வகையிலும் அதைப் பராமரிக்கும் உரிமையாளருக்கு உதவ முன்வரவில்லை. “நாய்கள் நம்பிக்கைக்கு பெயர் போனவை” என்ற பொதுவான நம்பிக்கையை இந்த காட்சி கேள்விக்குள்ளாக்கியதால், பலரும் வியப்பும், கோபமும் கலந்த விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ, ‘Nature is Amazing’ என்ற X கணக்கில் பகிரப்பட்டு, 2.78 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. மேலும், 2.75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதனை விரும்பினர். பலர் கமெண்டுகளில் “நாய் உண்மையோடு இருப்பதுதான் உண்மை, ஆனால் இது என்ன?” என்று கேலி செய்து எழுதியுள்ளனர். ஒருவர் விமர்சித்தது போல, “பசிக்காக உண்மை தன்மையே மறைந்துவிடுகிறது” என்ற செய்தியை இந்த வீடியோ நெடுந்தொடராக வைக்கிறது.