மும்பையின் Chhatrapati Shivaji Maharaj Terminus (CSMT) ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம், பயணிகளிடையே பெரும் கவலை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது CSMT ரயில் நிலையத்தில் மாலை 9:06 மணிக்கு வாஷி நோக்கி செல்லும் உள்ளூர் ரயில் புறப்பட தயாராக இருந்த நிலையில் தெரு நாய் ஒன்று ரயிலின் மேற்பகுதியில் ஏறி நின்று கொண்டிருந்தது. இதனை கண்ட காவல் துறையினர் (GRP, RPF) நாயை தள்ளிவிட முயன்ற போது, பயந்துபோன நாய் செய்வதறியாமல் மேற்பகுதியில் அங்குமிங்கும் ஓடியது.

அப்போது திடீரென அதன் உடலில் மின்கம்பி பட்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. அதன் பின்னர் மின்சாரத்தினை நிறுத்தி, நாயின் உடலை காவல் துறையினர் அகற்றினர். இதனால் 23 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் ரயில் நிலையத்தில் உள்ள CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, நாய் எப்படி ரயிலின் மேற்பகுதியில் ஏறியது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.