மகேந்திரா குடும்பத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தற்போது இணையத்தில் பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு மாற்றுத்திறனாளி நபர் சாலையோரம் நின்று கொண்டிருந்த போர்ஸே கார் அருகில் நின்று செல்பி எடுக்க முயன்றார். இதனைப் பார்த்த அந்த காரின் உரிமையாளர் அவரை அழைத்து புகைப்படம் எடுத்து தருவதோடு மட்டுமல்லாமல் அந்த காரில் சவாரி செய்யவும் அழைத்திருக்கிறார்.

அவர் கூறியதை கேட்டு மகிழ்ச்சியடைந்த அந்த நபர் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டார். அவரை மகிழ்ச்சி அடைய செய்த அந்த நபர் ஒரு கன்டென்ட் கிரியேட்டர் என்பதால் மாற்று திறனாளியை காரில் அழைத்து சென்றதை தன்னுடைய youtube சேனலில் “365good day challenge”தொடரில் வீடியோவாக வெளியிட்டார். இந்த வீடியோ கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது 9 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இந்நிலையில் ஆனந்த் மகேந்திரா இந்த வீடியோவை பார்த்த நிலையில் அதில் அந்த மனிதரின் மனிதநேயம் மற்றும் கருணையை பாராட்டி இருந்தார்.

அதற்கு மற்றொரு பயனர் “scripted” என்று கூறியிருந்த நிலையில் ஆனந்த் மகேந்திரா “அப்படி இருக்கலாம், ஆனால் நானும் மற்றவர்களும் இந்த வீடியோவில் உள்ள செய்தியை மட்டுமே பார்த்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம், இது நல் வழிகாட்டும் பதிவாக இருக்கிறது ” என்று பதிலளித்தார். மேலும் இவரது இந்த பதில் சமூக வலைதளங்களில் பல பயனர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.