குவைத்தில் ஒரு நேரலை செய்தி நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “இஷ்ராகா” (Ishraqah) எனப்படும் செய்தி நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பின் போது, உணவுப் பொருள் டெலிவரி ஊழியர் ஒருவர் ஸ்டுடியோவுக்குள் அமைதியாக நுழைந்து சென்றார்.

நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் நடந்தது, செய்தி வாசிப்பாளர்கள் சில வினாடிகள் குழப்பத்துடன் இருக்க நேர்ந்தது.

இந்த வீடியோவைக் குவைத் தொலைக்காட்சி செய்தி சேனலில் நிகழ்ந்த ஒரு “விசித்திரமான காட்சி” எனக் குறிப்பிட்டு பயனர் ஒருவர்  பகிர்ந்திருந்தார்.

அதில், டெலிவரி பணியில் இருந்த அந்த நபர், தனது பைகளைச் சுமந்து கொண்டு  ஸ்டுடியோவில் நடந்து செல்வதும், சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு தவறாக வந்திருப்பதை உணர்ந்து வெளியே செல்வதும் பதிவாகியுள்ளது.

இந்த காட்சி இணையதளங்களில் வேகமாகப் பரவி பலரையும் கவர்ந்துள்ளது. ஒருவர் நகைச்சுவையாக “நாட்டு முழுக்க சிரிப்பை டெலிவரி செய்தார்” என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர் “மேசையில்தான் டெலிவரி வரை கொண்டு வந்தாராம்!” என தெரிவித்துள்ளார். மேலும் சிலர், “அந்த ஊழியர் மிக அமைதியாக நுழைந்து சென்ற விதம் காமெடியாக இருந்தது” எனச் சொன்னார்கள்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, “நேரலை நிகழ்ச்சியிடம் எந்தவித தடையும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் நுழைய முடியுமா?” எனவும், சிலரால் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. எனினும், செய்தி வாசிப்பாளர்கள் தங்களின் அமைதியையும், நடத்தைதையும் இழக்காமல் நிர்வகித்த விதம் பாராட்டுதலை பெற்றுள்ளது.