கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (65). இவர் இறந்து விட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இவருக்கு அரசு வழங்கும் எந்த சலுகைகளையும் பெற முடியவில்லை. இதுகுறித்து பெலகாவி துணை ஆணையர் முகமது ரோஷனை சந்தித்து புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில், கடந்த 1976 ஆம் ஆண்டு தனது தாத்தா விட்டு சென்ற நிலங்களை மீட்டெடுப்பதற்கு தனது தாத்தாவின் இறந்த சான்றிதழை பெறுவதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு விண்ணப்பித்த போது டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் தாத்தாவின் ஆதார் எண்ணுக்கு பதிலாக எனது  ஆதார் எண்ணை தவறுதலாக கொடுத்து விட்டதால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் எனது ஆதார் கார்ட் மற்றும் ரேஷன் கார்டு லாக் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனை குறித்து பலமுறை தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை துணை ஆணையர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்தார் மற்றும் வழக்கறிஞருடன் சென்று அளித்துள்ளார். துணை ஆணையர் இந்தப் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.