
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் சகாய டேவிட் (27) – ஜெல்சியா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெல்சியா தனது கணவரை பிரிந்து வசித்து வந்த நிலையில், தற்போது கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இதனையறிந்த டேவிட் ஜெல்சியா மீது கோபத்தில் இருந்தார்.
கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி ஜெல்சியாவின் தந்தை ஸ்டீபன் வீட்டிற்க்கு சகாய டேவிட் சென்றார். அப்போது ஸ்டீபன் அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த நிலையில், சகாய டேவிட் ஜெல்சியாவின் மீதுள்ள கோபத்தினால் ஸ்டிபனை தகாத முறையில் பேசியுள்ளார். ஸ்டீபன் வீட்டின் கதவினை தான் கொண்டு வந்த அரிவாளால் வெட்டி சேதப்படுத்திய அவர் கொன்று விடுவேன் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இது தொடர்பாக ஸ்டீபன் காவல் நிலையத்தில் சகாய டேவிட் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஸ்டீபனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சகாய டேவிடிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.