
கேரளா மாநிலத்தில் 4-ம் வகுப்பு படிக்கும் போது பாபு என்பவருடன் பாலா, மேத்யூ என்பவர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 52 வருடங்களுக்குப் பிறகு அண்மையில் மூவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது கடந்த காலத்தைப் பற்றி பேசியுள்ளனர். அப்போது பாலா, மேத்யூ ஆகிய இருவருக்கும் நான்காம் வகுப்பில் நடந்த சண்டை நினைவுக்கு வந்துள்ளது.
இதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து பாபுவை (62) சரமாறியாக தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த பாபு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பாலா மற்றும் மேத்யூவை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.