
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 4 பேர் பயணம் செய்தனர். அப்போது கார் ஏ.வி பாளையத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட காரில் பயணித்த 4 பேரும் காரை விட்டு இறங்கி வெளியே ஓடினர். இதையடுத்து கார் வேகமாக பற்றி எரிய தொடங்கியது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீப்பிடித்து ஏரிந்த காரை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.