
இரவு நேரம் எவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இருந்தாலும், அதில் குற்றச்செயல்களுக்கு இடம் தரும் சூழல்களும் அடங்கியுள்ளன. அந்த வகையில், பங்களாதேஷில் நடைபெற்ற ஒரு கொடூரமான கொள்ளை முயற்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருட்டும், ஆள் நடமாட்டமும் இல்லாத சூழலும் காணப்பட்டன.
View this post on Instagram
நெடுஞ்சாலையில் காரில் பயணித்த நபர், திடீரென புதர்களுக்குள் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் வெளியே வந்த கொள்ளையர்களை பார்த்ததும், தன்னுடைய காரை பின்புறமாக இயக்கி தப்பியிருக்கிறார். இந்த அதிர்ச்சிகர சம்பவம் காரில் பொருத்தப்பட்ட டேஷ் கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
வீடியோவில், அந்த கார் பாலம் ஒன்றை கடக்க முயன்றபோது, சிலர் கத்தி மற்றும் அரிவாள்களை எடுத்துக்கொண்டு காரை நோக்கி ஓடினர். உடனே அந்த நபர் புத்திசாலித்தனமாக காரை பின்புறமாக இயக்கி முந்தியபடி விலகிச் செல்வதும் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு வகையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். “இந்த இருளான சாலையில், மிருகங்களைவிட மனிதர்கள் தான் ஆபத்தானவர்கள் என நம்ப வேண்டிய நிலை உள்ளது” என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், “இந்தக் காட்சி பார்ப்பதற்கே நடுக்கம் தருகிறது.
அந்த நபரின் நேர்த்தியான முடிவு அவருடைய உயிரைக் காப்பாற்றியுள்ளது” எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் ஆபத்துகளையும், இரவு நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தையும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.