
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி நகரில் 8 கால்களுடன் பிறந்த எருமை கன்றுக்குட்டி ஒன்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விவசாயி ஒருவருக்கு சொந்தமான எருமை, ஒரு கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் கன்றை ஈன்றது. இக்கன்று சாதாரணமானதல்ல என்பதால், அருகிலுள்ள மக்கள் இதில் ஆச்சரியப்பட்டு, அதனை பார்க்க விரும்பினர்.
கால்நடை மருத்துவர் கன்றின் உடல் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஆய்வு செய்தார். டிஎன்ஏ திரிபின் காரணமாக கன்றிற்கு 8 கால்கள் உருவாகியிருப்பதாகவும், இதனை ஒரு அசாதாரண நிகழ்வு எனவும் அவர் கூறினார். மேலும், பாலினத்தை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த கன்றுக்குட்டி பிற்காலத்தில் எவ்வாறு வளர்ந்துவரும் என்பதற்காக, மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். கன்றின் அசாதாரண உருவமைப்பு காரணமாக இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது, பலரும் இதனைப் பற்றி பேசி வருகிறார்கள்.