மதுரை மாவட்டத்திலுள்ள கே.புதூர் பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ் (27). இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி பாலில் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர்கள் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காளிதாசை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின்பு சிறையில் அடைத்தனர்.

மேலும் காளிதாஸ் மீது போச்சோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதன் பெயரில் பல்வேறு பிரிவுகளாக நடந்த இந்த வழக்கு நேற்று முடிவடைந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் கூறியதாவது, சிறுமியை வன்கொடுமை செய்த காளிதாசுக்கு ஆயுள் தண்டனையும்,1,15,000 அபராதமும் விதிக்க உத்தரவிட்டார்.