ஆந்திர மாநிலம், அச்சுதபுரம் அருகே உள்ள புடி மடகா மீனவர் கிராமத்தில் யர்ரையா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் கோர்லையா. இவர்கள் இருவரும் நேற்று யெல்லாஜி, அப்பல ராஜு ஆகியோருடன் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். அவர்கள் 4 பேரும் கடற்கரையில் இருந்து 30 கிலோமீட்டர் தாண்டி சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென வலையில் அதிக எடை கொண்ட மீன் சிக்கியது.

அந்த மீன் 100 எடை கிலோ எடை கொண்ட கொம்முக்கோணம் மீனாகும். வலையில் சிக்கிய அந்த மீனை படகிற்குள் இழுக்க முயற்சி செய்தபோது அவரால் இழுக்க முடியவில்லை. அப்போது வலையில் சிக்கியதால் கோபம் கொண்ட  கொம்முக்கோணம் மீன் யர்ரையாவை இழுத்து கடலுக்குள் சென்றது. அந்த சம்பவத்தை அருகிலிருந்தவர்கள் பார்த்த நிலையில் அதிர்ச்சடைந்தனர். கடலில் மூழ்கிய  யர்ரையா  உயிரிழந்து விட்டார்.

அதன் பின் யர்ரையாவின் சகோதரர் கொர்லையா இந்த தகவலை கிராம மக்களுக்கு தெரிவித்தார். அவர்கள் படகுகளில் வந்து விழுந்து அவரது உடலை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியாததால் அவர்கள் கிராமத்திற்கு திரும்பினர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.