நாகபட்டினம்  மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரித்த போது அவர் பெயர் அலெக்ஸ் என்பது தெரிய வந்தது.

பின்பு அவரை போலீசார் மறைமுகமாக கண்காணித்து வந்தனர். அப்போது அவர் நாகர்கோவிலில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை அருகே சென்றபோது விளக்குடி பகுதியில் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அலெக்சிடம் எட்டு கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் இருந்தது. எனவே போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்த போது போதைப் பொருள்களை இலங்கைக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

பின்பு அவரிடம் இருந்த போதைப் பொருட்கள் மற்றும் பணம் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு அலெக்ஸை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போதைப் பொருள் கட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.