முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியேற்றுள்ளார். அதில் கூறி இருப்பதாவது, செந்தில் பாலாஜி ஆட்சிக்கு ஆட்சி மாறிக்கொண்டே இருக்கின்றார். அவர் எப்போதாவது ஒரே கட்சியில் இருந்து உள்ளாரா? அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என பல முறை கேட்டு அதில் தோற்றுப் போய் தான் பிளாக்கில் டிக்கெட் பெற்று திமுகவில் இணைந்தார். அங்கு அவரது இடத்தை தக்க வைத்துக் கொள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசுகிறார். மேலும் தமிழ் நாகரீகம் இல்லாத வகையில் பேசினால் அவர் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் அவரிடத்தில் கொள்ளையடித்த பணம் இருக்கலாம்.

ஒரு நாளைக்கு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என ஒரு நாளைக்கு பத்து கோடி வசூல் செய்து கொடுப்பவர் என்பதால் அவர் வல்லவராகி முடியாது. சேவை என்பதற்கான இலக்கணமே தெரியாதவர் செந்தில் பாலாஜி. அவரை அருகிலிருந்து பார்த்தவன் என்ற முறையில் நான் நன்கு அறிவேன். அதிமுகவில் இருந்த போது திமுகவை பற்றி எவ்வளவு அவதூறாக பேசினார். கொள்ளை கூடாரம் கருணாநிதி குடும்பம் என செந்தில் பாலாஜி சொன்னாரா.. இல்லையா.. அது எப்படி மதிப்பிழந்து போனதோ அதேபோல் இந்த பேச்சும் மதிப்பிழந்து போகும். முதலமைச்சர் மு க ஸ்டாலின் கரூர் சென்று செந்தில் பாலாஜியை எப்படி பேசினார்? இன்று அதே முதலமைச்சர் எப்படி பேசுகின்றார். அப்படி என்றால் அரசியல் வியாபாரி யார்..? அரசியல் என்றால் சேவை மக்கள் பணி ஆனால் செந்தில் பாலாஜிக்கு தெரிந்தது எல்லாம் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.