நாட்டின் பல்வேறு இடங்களில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க ரிசர்வ் வங்கி பல்வேறு விதமான நடவடிக்கைகளை செய்து வருகின்றது. இதனால் கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய வங்கி புதிய 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது. இவை பழைய 500 ரூபாயில் இருந்து முழுமையாக வேறுபடும். ஆனால் கள்ள நோட்டுகளின் புழக்கம் குறைந்தபாடில்லை.

எனவே நீங்கள் வைத்திருக்கும் நோட்டுகள் கள்ள நோட்டா அல்லது நல்ல நோட்டா என்று கண்டுபிடிக்கும் வழிகளை தெரிந்து கொள்ளுங்கள். அரசாங்கம் வெளியிட்ட புதிய நோட்டுகளில் சில முக்கிய விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு அம்சங்களுக்காக முக்கிய 17 அடையாளங்களை புதிய 500 ரூபாய் நோட்டுகள் கொண்டுள்ளது. முதல் அடையாளமாக வெளிப்படையான முறையில் 500 என்ற எண் எழுதப்பட்டிருக்கும். இரண்டாவதாக வட்ட வடிவில் கீழே ஒரு ரகசிய படம் இருக்கும். அதிலும் 500 என்று எழுதப்பட்டிருக்கும்.

மூன்றாவதாக தேவனாகிரியிலும் 500 என எழுதப்பட்டிருக்கும். நான்காவது நோட்டின் நடுவில் மகாத்மா காந்தி புகைப்படம் இருக்கும். ஐந்தாவதாக பாரத் மற்றும் இந்தியா ஆகியவை நுண் எழுத்துக்களில் பதிக்கப்பட்டிருக்கும். ஆறாவதாக மிக முக்கியமாக இந்தியா மற்றும் ரிசர்வ் வங்கி என்று எழுதப்பட்டிருக்கும் இடத்தில் ஷிப்ட் விண்டோ பாதுகாப்பு அடையாளம் இருக்கும். இது சாதாரணமாக பச்சை நிறமாக இருக்கும். இதுவே நேராக வைத்து பார்த்தால் நீல நிறமாக மாறும்.

ஏழாவது அடையாளமாக மகாத்மா காந்தியின் வலதில் கவர்னரின் கையொப்பத்துடன் கூடிய உத்தரவாத வாக்கியம் மற்றும் ஆர்பிஐ குறியிருக்கும். எட்டாவதாக வாட்டர் மார்க் காலி இடத்தில் மகாத்மா காந்தி படம், அதுபோல 500 என்று எழுதி மறைக்கப்பட்டு இருக்கும். ஒன்பதாவதாக நோட்டின் கீழ் வலது பக்கத்தில் ஏறு வரிசையில் இருக்கும் எண்களாகும். பத்தாவது அடையாளமாக கீழ் வலது புறத்தில் உள்ள ரூபாய் 500 பச்சை மற்றும் நீல நிறத்தில் மாறும். ஏனென்றால் வண்ணத்தை மாற்றும் மையில் எழுதப்பட்டுள்ளது.

11ஆவது அடையாளமாக வலது பக்கத்தில் உள்ள அசோகா சின்னம். 12 வது அடையாளம் பார்வையற்றோருக்காகவே பிரத்யேக அடையாளம் கொண்டது. நோட்டின் வலது புறத்தில் மைக்ரோ டெக்ஸ்டைல் 500 மற்றும் ஐந்து கோண இரத்த கோடுகள் வட்ட அடையாளப் குறியாகும்.

13 வது அடையாளமாக இடது பக்கத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு. 14 வது அடையாளமாக ஸ்வச் பாரத் என்ற முழக்கம் இருக்கும். 15 வது அடையாளம்  மொழிப் பலகம் ஆகும். பதினாறாவது அடையாளம் செங்கோட்டையின் வடிவம் மற்றும் 17வது அடையாளமாக தேவனாகிரியில் 500 எழுதப்பட்டுள்ளது. இந்த நோட்டின் அளவு 66 மில்லி மீட்டரில் இருந்து 150 மில்லி மீட்டர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.