
பெங்களூரை சேர்ந்த பிரபா அருண்குமார் என்ற 41 வயது பெண் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இதுவரை எந்த ஒரு குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியா காவல் அதிகாரிகள் பிரபா கொலை செய்யப்பட்டது பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ஐந்து கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.