மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து 19 வயது வாலிபர் கொடூரமாக கொலை செய்தார். இதுகுறித்து புகாரின் அடிப்படையில் குற்றவாளியான முஸ்தாகின் சர்தாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த அக்டோபர் மாதம் நான்காம் தேதி அந்த சம்பவம் நடைபெற்றது.

குற்றம் நடந்த 61 நாட்களில் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் வாலிபருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதனை மேற்கு வங்க முதல்வர் மம்தா வரவேற்றார். மேலும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.