தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்கு பாறைப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் அஜித்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் 9-ம் வகுப்பு வரை படித்த நிலையில் அதன் பின் பள்ளிக்கு செல்லவில்லை.

அதோடு வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்தபடி நண்பர்களுடன் ஊர் சுற்றியுள்ளார். இதனை அவரது தந்தை விஜயகுமார் கண்டித்த நிலையில் சிறுவன் மன வேதனை அடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.

அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து திருவேங்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.