தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வடந்தையூர் பகுதியை சேர்ந்த அக்பர் (27), தனியார் போட்டோ ஸ்டுடியோவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், மஞ்சவாடி பகுதியைச் சேர்ந்த தஸ்லீம்பானு (20) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிறந்து 9 மாதங்களே ஆன ஆத்தீப் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால் பானு அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு சென்று விடுவார். சமீபத்தில் நடந்த பெரியவர்கள் பேச்சுவார்த்தைக்கு பின், தஸ்லீம் பானு மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தார்..

இந்நிலையில், நேற்று மாலை அக்பர் தனது வேலை முடித்து வீட்டிற்கு வந்தபோது வீடு உள்ளே தாழிட்டிருந்தது. கதவு வழியாக பார்த்தபோது, தஸ்லீம்பானு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததை கண்டார்.

இதனையடுத்து  கதவை உடைத்து உள்ளே நுழைந்த உறவினர்கள், குழந்தை ஆத்தீப்பின் இடது கை மணிக்கட்டில் பிளேடால் அறுக்கப்பட்ட காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் அரசு  அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.