
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை நேரில் சந்தித்து பேசிய நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சிறார் அணி முதல் திருநங்கைகள் அணி வரை மொத்தம் 28 அணிகள் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இதில் திருநங்கைகள் அணி 9-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது திருநங்கைகள் அணி இடம்பெற்று இருப்பது மகிழ்ச்சியை கொடுத்தாலும் ஒன்பதாவது இடத்தில் இடம் பெற்றுள்ளது வருத்தத்தை தருவதாக திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் வித்யா சுட்டிக் காட்டியுள்ளார். அவர் ஒன்பது என்ற இழிவை நாங்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு சுமக்க வேண்டும் என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விளக்கம் கொடுக்கப்படவில்லை.